close
Choose your channels

சந்தானம் நடிக்கும் 'சர்வர் சுந்தரம்' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

Saturday, May 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நகைச்சுவை நடிகரில் இருந்து ஹீரோவாக புரமோஷன் ஆகியுள்ள சந்தானம் தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று 'சர்வர் சுந்தரம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள 'சர்வர் சுந்தரம்' படத்தின் பாடல்கள் வரும் 10ஆம் தேதி சென்னையில் வெளியாகவுள்ளது. இந்த தகவலை சந்தானம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

கடந்த ஆண்டு 'கபாலி' , கொடி, காஷ்மோரா ஆகிய படங்கள் உள்பட பல படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன், இந்த ஆண்டு இளையதளபதியின் 'பைரவா' படத்திற்கு பின்னர் இசையமைத்திருக்கும் படம் 'சர்வர் சுந்தரம்' என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தானம், வைபவி, நாகேஷ் பேரன் பிஜேஷ், ராதாரவி, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். கெனன்யா பிலிம்ஸ் தயாரித்துள்ள நித படத்திற்கு வர்மா ஒளிப்பதிவும், தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.