close
Choose your channels

இன்று மாலை பறக்க போகும் ஓவியாவின் 'பலூன்'

Friday, September 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகிய ஓவியா, கடந்த சில வாரங்களுக்கு முன்பே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாலும், அவரது புகழ் இன்னும் சமூக வலைத்தளங்களில் நீடித்து கொண்டே இருக்கின்றது.

சமூக வலைத்தளங்களில் மட்டுமின்றி அவர் பேசிய சில வசனங்கள் திரையுலகினர்களையும் கவர்ந்தது. அந்த வகையில் 'நீங்க ஷட்டப் பண்ணுங்க' என்று ஆரம்பிக்கும் பாடல் ஒன்று ஜெய், அஞ்சலி நடித்த பலூன் படத்தில் இடம்பெற்றது என்பது தெரிந்ததே.

யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவான இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். இந்த பாடல் இன்று மாலை வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓவியா வசனத்தில் பறக்கவிருக்கும் இந்த பலூன் பாடல் ஓவியா ஆர்மியினர்களை எந்த அளவு ரசிக்க வைத்தது என்பதை மாலையில் பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.