close
Choose your channels

நல்ல வாய்ப்பு கிடைத்தால் நடிக்க தயார்: ரஜினி மகள் அதிரடி அறிவிப்பு

Wednesday, July 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினியின் குடும்பமே ஒரு கலைக்குடும்பம் என்று கூறலாம். ரஜினி சூப்பர் ஸ்டார் நடிகராக, அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா, இளையமகள் செளந்தர்யா இயக்குனர்களாக, மருமகன் தனுஷ் நடிகராக உள்ளனர். ஏன், ரஜினியின் மனைவி லதா ஒரு நல்ல பாடகி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நல்ல வாய்ப்பு கிடைத்தால் சினிமாவில் நடிக்க தயார் என்று செளந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த செளந்தர்யா, 'ஏற்கனவே நடிக்க பல வாய்ப்புகள் வந்ததாகவும், நல்ல கேரக்டரில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் நான் நடிக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் குடும்பம், திரையுலகம் இரண்டிலும் தன்னால் ஈடுபட தனது தாயாரே முழு காரணம் என்றும், தனது மகன் வேத் தனது தாயாரால் பாதுகாப்பாக கவனிக்கப்படுவதால் தன்னால் சினிமா வேலையில் முழுமையாக, நிம்மதியாக ஈடுபட முடிவதாகவும் செளந்தர்யா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.