close
Choose your channels

ரசிகர்களை சமாதானப்படுத்த சூர்யாவின் கேரம்போர்டு ஸ்டில்

Monday, May 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இன்னும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளிவரவில்லை என்பதால் சூர்யா ரசிகர்கள் ஆதங்கத்தில் உள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக சூர்யா ரசிகர்கள் விக்னேஷ் சிவனை மிமீஸ் போட்டு சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வந்தனர்.

தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் சூர்யா கேரம்போர்டு விளையாடுவது போன்ற ஒரு ஸ்டில்லை வெளியிட்டு, 'மிமீஸ் போதும், இன்னும் சில நாட்களில் ஃபர்ஸ்ட்லுக் வெளிவரும் என்று ரசிகர்களை சமாதானம் செய்துள்ளார். இதனால் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா, கீர்த்திசுரேஷ், செந்தில், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.