close
Choose your channels

'தானா சேர்ந்த கூட்டம்' பர்ஸ்ட்லுக் எப்போது?

Sunday, July 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக், டீசர் ஆகியவற்றை எதிர்பார்த்து சூர்யாவின் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் இந்த வாரம் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளிவரும் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

அதேபோல் சூர்யாவின் பிறந்த நாளான இம்மாதம் 25ஆம் தேதியும் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருப்பதாக படகுழுவினர்களிடம் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது.

சூர்யா, கீர்த்திசுரேஷ், செந்தில், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் கார்த்திக் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றை ஏற்று நடித்து வருகிறார். 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.