close
Choose your channels

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கமல் கூறியது என்ன?

Friday, May 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி வரும் ஜூன் 25ஆம் தேதி முதல் தமிழில் தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் 14 செலிபிரிட்டிக்கள் கலந்து கொள்ளவிருப்பதாகவும், அவர் யார் யார் என்பது இறுதி செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் அவர்களுடைய பெயர்கள் அறிவிக்கப்படும் என்றும் கமல்ஹாசன் கூறினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ள 14 செலிபிரிட்டிகளும் 100 நாட்கள் ஒரே வீட்டில் தங்கவுள்ளதாகவும், அவர்களை 30 கேமிராக்கள் கவனித்து கொண்டிருக்கும் என்றும் ஆவ்ர் கூறினர். இந்த நிகழ்ச்சியில் இறுதியில் 10 வினாடி டீசர் ஒன்று ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து சொல்லும்படி செய்தியாளர் ஒருவர் கேட்க அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், 'இந்த கேள்விக்கு பதிலளிக்க தனியாக ஒரு பிரஸ்மீட் விரைவில் நடத்தவிருப்பதாக கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.