close
Choose your channels

VSOP படத்தின் டிராக் லிஸ்ட் விபரம்

Wednesday, July 29, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'பாஸ் என்கிற பாஸ்கரன்' என்ற வெற்றி திரைப்படத்திற்கு பின்னர் எம்.ராஜேஷ், ஆர்யா மற்றும் சந்தானம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் 'வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க' இந்த படத்தின் டீஸர் மற்றும் 'லக்கா மாட்டிகிச்சு' சிங்கிள் டிராக் ஆகியவை சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இன்று இந்த படத்தின் பாடல்கள் ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டி.இமான் முதல்முறையாக எம்.ராஜேஷ் படத்திற்கு இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டிராக்-லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெறுகின்றன.

1. வாசுவும் சரவணனும்' என்று தொடங்கும் பாடலை நா.முத்துக்குமார் எழுத, சூரஜ் சந்தோஷ் மற்றும் கைலாஷ் கெர் ஆகியோர் பாடியுள்ளனர்.

2. சோனா சோனா' என்று தொடங்கும் இந்த பாடலும் நா.முத்துகுமார் எழுதியதுதான். அர்மான் மாலிக், வருண் பரந்தாமன், மற்றும் மரியா ரோ வின்செண்ட் ஆகியோர் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர்.

3. லக்கா மாட்டிகிச்சு' என்ற இந்த ஹிட் பாடலை எழுதியவர் ரோகேஷ். தோலக் கானா ஜெகன், செந்தில்தாஸ் மற்றும் பழனியம்மாள் ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.

4. 'அடடா ஒண்ணும் சொல்லாத' என்று தொடங்கும் இந்த பாடலை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். இந்த பாடலை பென்னி தயால், சாக்சிஸ்ரீ கோபாலன் ஆகியோர் பாடியுள்ளனர்.

5. 'நான் ரொம்ப பிஸி' என்று தொடங்கும் இந்த பாடல் நா.முத்துக்குமார் மற்றும் சினேகிதா சந்திரா ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சந்தோஷ் ஹரிஹரன், நீதிமோகன், சரண்யா கோபிநாத் ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.

இவை தவிர சோனா சோனா, அடட ஒண்ணும் சொல்லாத, லக்கா மாட்டிகிச்சி ஆகிய மூன்று பாடல்களின் கரோகியும் வெளியாகியுள்ளது.

ஆர்யா, சந்தானம், தமன்னா, தாமிரபரணி' பானு, கருணாகரன், வித்யூலேகா ராமன், மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தில் விஷால் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நீரவ் ஷா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 14ல் ரிலீஸ் ஆகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.