close
Choose your channels

ரஜினி பட டைட்டிலில் விஜய் ஆண்டனியின் அடுத்த படம்

Saturday, April 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. பிச்சைகாரன், சைத்தான், 'எமன்' ஆகிய படங்களை அடுத்து தற்போது அவர் 'அண்ணாதுரை' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் இயக்குனர் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளிவதுள்ளது. விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தை நடிகர்-தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் மனைவியும் 'வணக்கம் சென்னை' பட இயக்குனருமான கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு 'காளி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதே டைட்டிலில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1980ஆம் ஆண்டு ஒரு திரைப்படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை விஜய் ஆண்டனியின் 'விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேசன்' நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் பணிபுரியும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.