close
Choose your channels

ரஜினியின் டைட்டிலில் ரெளடி நடிகர்?

Wednesday, November 11, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆயுதபூஜை தினத்தில் வெளியான விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரெளடிதான்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து விஜய்சேதுபதியின் மார்க்கெட் உயர்ந்திருப்பதாகவும், அவரை பெரிய இயக்குனர்கள் புக் செய்ய விரும்புவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே தனுஷ் தயாரிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில் தேசிய விருதுபெற்ற இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்திலும் விஜய் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவருடைய இயக்கத்தில் வெளிவந்த 'தென்மேற்கு பருவக்காற்று' திரைப்படம்தான் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனுராமசாமி-விஜய்சேதுபதி நடிக்கவுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ 9' நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ரஜினி, கவுதமி நடித்த 'தர்மதுரை' படத்தின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.