close
Choose your channels

விக்ரம்-விஜய்சந்தர் படத்தின் டைட்டில் அறிவிப்பு

Friday, April 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சியான் விக்ரம் மற்றும் 'வாலு' இயக்குனர் விஜய்சந்தர் இணைந்து உருவாக்கி வரும் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் இன்று வெளிவரும் என்ற தகவலை ஏற்கனவே பார்த்தோம். அதன்படி சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு 'ஸ்கெட்ச்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஸ்கெட்ச் போட்டு தூக்க வேண்டும் என்று வழக்கமாக கூறப்படும் நிலையில் அந்த 'ஸ்கெட்ச்' என்ற வார்த்தை தற்போது விக்ரமின் அடுத்த பட தலைப்பாகியுள்ளது. இந்த படத்தில் விக்ரம், வடசென்னையில் உள்ள கேங்க்ஸ்டர் தலைவராக நடித்து வருவதாக கூறப்படுவதால் இந்த தலைப்பு படத்தின் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என கருதப்படுகிறது. இருப்பினும் தமிழக அரசின் வரிவிலக்கை பெற, கடைசி நேரத்தில் தலைப்பில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

விக்ரம், தமன்னா முதல்முறையாக ஜோடி சேரும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்து வருகிறார்கள். சென்னையை சுற்றி இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.