close
Choose your channels

மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியுடன் விஷால் டீம் சந்திப்பு

Saturday, March 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வங்கிக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட தமிழக விவசாயிகள் கடந்த இரண்டு வாரங்களாக தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை இதுவரை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாத நிலையில் நேற்று நடிகர்கள் விஷால், பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாண்டிராஜ் உள்ளிட்ட டீம் டெல்லி சென்று தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தனர்.
இந்நிலையில் சற்று முன்னர் மத்திய நிதியமைச்சரை சந்தித்த விஷால் டீம், அவரிடம் விவசாயிகளின் கோரிக்கைகளை கொண்ட மனுவை அளித்தனர்.
தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நேரடியாக மத்திய நிதியமைச்சருக்கு எடுத்து சென்ற விஷால் குழுவினர்களுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.