சாரண, சாரணியர் இயக்க தேர்தல்: எச்.ராஜா தோல்வி

  • IndiaGlitz, [Saturday,September 16 2017]

தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று சென்னை மெரினாவில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும், பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குனர் பி.மணியும் போட்டியிட்டனர்.

இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் எச்.ராஜா ஆதரவாளர்கள் தேர்தல் அதிகாரிகளில் மோதலில் ஈடுபட்டனர். இதனால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டாலும் பின்னர் தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்தது.

இந்த நிலையில் சற்றுமுன்னர் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எச்.ராஜா தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக இந்தத் தேர்தலே செல்லாது என்றும் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற இருந்த தேர்தலை முன்கூட்டியே நடத்திவிட்டதாகவும் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

More News

வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்: மாதவனுக்கு சூர்யா அனுப்பிய குறுஞ்செய்தி

நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று வெளியாகியிருக்கும் படம் 'மகளிர் மட்டும்'.

'சாவித்ரி' வாழ்க்கை வரலாறு படத்தில் ரஜினியின் நண்பர்

பழம்பெரும் நடிகை நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் உருவாகி வருகிறது.

தயவுசெய்து தவறான செய்தியை பரப்ப வேண்டாம்: மனோபாலா வேண்டுகோள்

நடிகரும் இயக்குனருமான மனோபாலா தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'சதுரங்க வேட்டை 2'. அரவிந்தசாமி, த்ரிஷா முதன்முதலில் ஜோடி சேரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

தளபதி விஜய்யின் 'மெர்சல்' டீசர் எப்போது? புதிய தகவல்

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக உள்ளது.

காணாமல் போன நடிகையின் சகோதரர் மகள் வீடு திரும்பினார்

நடிகைகள் டிஸ்கோ சாந்தி, லலிதாகுமாரி ஆகியோர்களின் சகோதரர் மகள் அபிர்ணா சமீபத்தில் காணாமல் போனார் என்பதும், அவரை காவல்துறையினர் உதவியுடன் குடும்பத்தினர் தேடி வந்தனர் என்பதும் அனைவரும் அறிந்ததே.