close
Choose your channels

'சாவித்ரி' வாழ்க்கை வரலாறு படத்தில் ரஜினியின் நண்பர்

Saturday, September 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பழம்பெரும் நடிகை நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் உருவாகி வருகிறது. சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் துல்கர் சல்மான், ஷாலினி பாண்டே, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். நாக் அஸ்வின் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகரும், ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராகிய மோகன்பாபு தற்போது இணைந்துள்ளார். இவர் இந்த படத்தில் பழம்பெரும் குணசித்திர நடிகர் எஸ்.வி.ரெங்காராவ் கேரக்டரில் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ரெங்காராவ், சாவித்ரி பல தமிழ், தெலுங்கு படங்களில் இணைந்து நடித்தவர்கள் என்பதும் குறிப்பாக 'மாயா பஜார்' இருவரின் நடிப்பை மிக பிரமாதமாக வெளிப்படுத்திய படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.