கல்லூரி வளாகத்தில் பீர்பாட்டிலுடன் குத்தாட்டம் போட்ட மாணவிகள்: வைரலாகும் வீடியோ

  • IndiaGlitz, [Sunday,February 17 2019]

ஒடிசா மாநிலத்தில் புரி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவிகள் கையில் பீர் பாட்டிலுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் புரியில் உள்ள சமந்த சந்திர சேகரா என்ற கல்லூரி மாணவிகள் சிலர் கல்லூரி வளாகத்திலேயே கையில் பீர் பாட்டிலுடன் குத்தாட்டம் போட அதனை மற்ற மாணவ, மாணவிகள் வேடிக்கை பார்க்கின்றனர். மேலும் இந்த வீடியோ சரஸ்வதி பூஜை நாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

ஆனால் கல்லூரி நிர்வாகம் இதனை மறுத்துள்ளது. இதுகுறித்து விசாரணை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் மாணவ, மாணவிகள் தவறு செய்திருப்பது நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் வீடியோவில் கையில் பீர் பாட்டிலுடன் உள்ள மாணவிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒடிசாவின் பழமையான, மதிப்பு மிகுந்த கல்லூரிகளில் ஒன்றிலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது குறித்து அந்த பகுதி மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

More News

காஷ்மீர் தாக்குதலின் பதிலடிக்கு ஆதரவு அளிப்போம்: நடிகர் சங்கம் அறிக்கை

காஷ்மீர் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தீவிரவாத அமைப்பு ஒன்று நடத்திய காட்டுமிராண்டித்தனமான தீவிரவாத தாக்குதலுக்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் 44 பேர் வீரமரணம் அடைந்தனர்.

விஷாலின் 48 மணி நேர சாதனை

விஷால், ராசிகண்ணா நடிப்பில் ஏஆர் முருகதாஸின் உதவியாளர் வெங்கட் மோகன் இயக்கி வரும் 'அயோக்யா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சித்துவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

காஷ்மீரில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பு ஒன்று நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீர்ர்கள் பலியான சம்பவம் ஒட்டுமொத்த இந்தியர்களையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

ரஜினி படத்தை பயன்படுத்தி மீம் போட்ட ஆஸ்திரேலியா போலீஸ்

ஆஸ்திரேலியா காவல்துறையும் ரஜினியின் படத்தை பயன்படுத்தி ஒரு விழிப்புணர்வு மீம் ஒன்றை தங்களது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

சுதந்திர போராட்ட வீரரின் தாக்குதல்: பாகிஸ்தான் ஊடகம் செய்தி

காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் நடந்த தாக்குதலால் 44 இந்திய வீரர்களை இழந்த இந்தியா கடும் கோபத்தில் உள்ள நிலையில் பாகிஸ்தான் பத்திரிகை