close
Choose your channels

கிட்ட தட்ட இத பிளான் பண்ணவே ஒரு வருஷம் ஆச்சி - Dr. VinothiniPandiyan

Tuesday, February 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்ப்பரிக்கும் ஆனந்தமாய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜயகுமார் இல்ல திருமண விழா சமீபத்தில் இணையத்தில் அனைவரையும் ஈர்த்தது.அதில் கலந்து கொண்ட அவரது குடும்பத்தின் நெருங்கிய தோழி டாக்டர் வினோதினி அவர்கள்,அவள் Glitz யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில்.

தியா எனக்கு இன்னொரு மகள் போல. மிகவும் எளிமையானவள். லண்டனில் டாக்டருக்கு படித்தபோது தீலனை காதலித்து இருக்கிறாள். அதை அப்படியே வீட்டில் சொல்லும்போது,தியா வீட்டில் இருந்து எல்லோரும் மாப்பிள்ளை வீட்டுக்கு சென்று பேசி முடிவு செய்து கடந்த வருடமே திருமணம் சார்ந்த தீர்மானங்களை எடுத்து விட்டோம்.

 

கடந்த மாதம் அனிதா வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு மாப்பிள்ளை வீட்டார்களும் வந்திருந்தனர்.எனவே அப்போதே திருமண ஓலைகள் படித்து அந்த நிகழ்ச்சியும் நடைபெற்றது.ஜனவரி 15 ஆம் தேதி பந்தக்கால் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. மேலும் நிகழ்ச்சியை கோலாகலமாக திட்டமிட்டு நடத்தி முடிக்கவே கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியுள்ளது.விஜயகுமார் சார்க்கு தனது பேத்தி தியா மீது அதீத அன்பு . எனவே திருமண நிகழ்ச்சியில் பல தருணங்களில் அவர் கண் கலங்கி நான் பார்த்தேன்.

மாப்பிள்ளை தீலன் குஜராத்தை சேர்ந்தவர்.எனவே பந்தக்கால் நடுதல் நிகழ்ச்சியில் தியாவிற்கு திருமண ஆடை , அலங்காரங்கள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் என அனைத்தையுமே அவர்களே கொடுத்தனர்.தியாவும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள்.

திருமண நிகழ்வு மிகவும் பிரம்மாண்டமாக பல பிரபலங்கள் கலந்து கொண்டு,எந்த ஒரு இடையூறும் இல்லாமல் வெகு விமர்சையாக நடைபெற்றது என கூறினார்.

தோழி வினோதினி கூறிய பல இரகசியங்களை அறிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment