கடலில் ஜெட்-ஸ்கை ஓட்டி அசால்ட் காட்டிய நடிகை பிரியங்கா… வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Thursday,October 07 2021]

தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா. அதற்குப் பிறகு பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறிய இவர் தற்போது ஹாலிவுட்டிலும் கொடிக்கட்டி பறந்துவருகிறார். இவர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான குவாண்டிகோ வெப் சீரியஸை தொடர்ந்து ஹாலிவுட் வட்டாரத்தில் முக்கியப் பிரபலமாகவும் மாறியிருக்கிறார்.

இந்நிலையில் சிட்டாடல் எனும் புதிய வெப் சீரிஸில் நடித்து வரும் நடிகை பிரியங்கா அதன் படப்பிடிப்புக்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார். மேலும் அங்குள்ள படகு நகரமான வலென்சியாவிற்குத் தனது தாயுடன் சென்ற அவர் கடலில் ஜெட்-ஸ்கை சவாரி செய்து பலரையும் அசத்தியுள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

படகு நகரமான வலென்சியாவிற்கு நடிகை பிரியங்காவின் மது சோப்ரா, வளர்ப்பு நாய் டயானா, பிரிட்டிஷ் நடிகர் ஒஸி இகிலே மற்றும் ஆடை வடிவமைப்பாளர் சாராசென்சாய் போன்றோரும் சென்றுள்ளனர். இவர்களுடன் படகில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் நடிகை பிரியங்கா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகின்றன.

நடிகை பிரியங்கா சிட்டாடல் வெப் சீரியஸை தொடர்ந்து உலக அளவில் அதிக எதிர்ப்பார்ப்பு கொண்ட பிரம்மாண்ட திரைப்படமான Matrix4 திரைப்படத்தில் இணைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பாலிவுட்டில் நடிகை ஆலியாபட் மற்றும் கேத்ரினா கைஃப் உடன் இணைந்து Jee Le Zaraa எனும் திரைப்படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

More News

கருப்பு கடவுள் காஸ்ட்யூமில் பிக்பாஸ் ஸ்ருதி: வேற லெவலில் வைரல்

கடவுள் என்றாலே வண்ண வண்ண நிறங்களில் தான் இருப்பார்கள் என நமக்கு சிறுவயதிலிருந்தே முன்னோர்கள் சொல்லி கொடுத்து இருந்த நிலையில் கருப்பு நிறத்தில் கடவுள் இருப்பதாக போட்டோ ஷூட்

சி.எஸ்.கே.வுக்காக இனி தோனி விளையாட மாட்டாரா? அவரே அளித்த அதிர்ச்சி பதில்!

நான் இனிமேல் சி.எஸ்.கே.வுக்காக விளையாடுவேனா என்பது எனக்கே தெரியாது என தோனி கூறியிருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

அல்ட்ரா மாடல் உடையில் கலக்கும் பவானி ரெட்டி!

பிக்பாஸ் தமிழ் 5வது சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் இவர்களில் பிரியங்கா, ராஜூ ஜெயமோகன், பவானி ரெட்டி, நமீதா, தாமரை செல்வி, அபிஷேக் உள்பட ஒருசில போட்டியாளர்கள்

குறும்படம் போடுங்க பிக்பாஸ்: ப்ரியங்காவால் ஆவேசமான அபிஷேக்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலகலப்பான போட்டியாளரான பிரியங்காவால் ஆவேசமான அபிஷேக் ராஜா குறும்படம் போடுங்க பிக்பாஸ் என தெரிவித்தது இன்றைய மூன்றாவது புரமோ வீடியோவில் வெளிவந்துள்ளது.

ராஜினாமா செய்வாரா பிக்பாஸ்: வேற லெவலில் கலாய்க்கும் ப்ரியங்கா!

அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி சீரியசாக நடந்துகொண்டிருக்கிறது என்பதையும் தமிழில் கூட கடந்த நான்கு சீசன்களாக போட்டியாளர்கள் அனைவரும் சீரியஸாக இருந்தனர்