close
Choose your channels

கடலில் ஜெட்-ஸ்கை ஓட்டி அசால்ட் காட்டிய நடிகை பிரியங்கா… வைரல் வீடியோ!

Thursday, October 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் வெளியான "தமிழன்" திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா. அதற்குப் பிறகு பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறிய இவர் தற்போது ஹாலிவுட்டிலும் கொடிக்கட்டி பறந்துவருகிறார். இவர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான "குவாண்டிகோ" வெப் சீரியஸை தொடர்ந்து ஹாலிவுட் வட்டாரத்தில் முக்கியப் பிரபலமாகவும் மாறியிருக்கிறார்.

இந்நிலையில் "சிட்டாடல்" எனும் புதிய வெப் சீரிஸில் நடித்து வரும் நடிகை பிரியங்கா அதன் படப்பிடிப்புக்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார். மேலும் அங்குள்ள படகு நகரமான வலென்சியாவிற்குத் தனது தாயுடன் சென்ற அவர் கடலில் ஜெட்-ஸ்கை சவாரி செய்து பலரையும் அசத்தியுள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

படகு நகரமான வலென்சியாவிற்கு நடிகை பிரியங்காவின் மது சோப்ரா, வளர்ப்பு நாய் டயானா, பிரிட்டிஷ் நடிகர் ஒஸி இகிலே மற்றும் ஆடை வடிவமைப்பாளர் சாராசென்சாய் போன்றோரும் சென்றுள்ளனர். இவர்களுடன் படகில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் நடிகை பிரியங்கா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகின்றன.

நடிகை பிரியங்கா "சிட்டாடல்" வெப் சீரியஸை தொடர்ந்து உலக அளவில் அதிக எதிர்ப்பார்ப்பு கொண்ட பிரம்மாண்ட திரைப்படமான "Matrix4" திரைப்படத்தில் இணைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பாலிவுட்டில் நடிகை ஆலியாபட் மற்றும் கேத்ரினா கைஃப் உடன் இணைந்து "Jee Le Zaraa" எனும் திரைப்படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.