குழந்தையைப் போல சமத்தா… தூரியில் தூங்கும் கன்றுக்குட்டி… அசத்தல் வீடியோ!!!

  • IndiaGlitz, [Monday,December 21 2020]

 

மனிதர்கள் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகளிலேயே பசு மாட்டிற்கு எப்போதும் அதிக மதிப்பு கொடுக்கப் படுகிறது. காரணம் பசு- செல்வத்தின் ஒரு குறியீடாகவே பழங்காலம் முதல் கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு கன்றுக் குட்டிக்கு தூரி கட்டி அதில் சொகுசாகத் தூங்க வைக்கும் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ பலருக்கும் வியப்பை அளித்து இருக்கிறது.

ஒரு விவசாயி தன்னுடைய கன்றுக்குட்டிக்கு தோட்டத்திற்கு  நடுவே தூரிகட்டி இருக்கிறார். அந்த தூரியில் ஏற தவிக்கிறது 2 மாதங்களே ஆன ஒரு கன்று குட்டி. அதைப் பார்த்த அந்தக் குடும்பம் கன்றுக் குட்டியை அழகாகத் தூக்கி அந்த தூரியில் போடுகிறது. பின்னர் அந்தக் கன்றுக்குட்டி சுகமாக தூங்குகிறது. இப்படி ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது.

மறைந்துபோன நா. முத்துக்குமார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தில் பல்லேலக்கா என்றொரு பாடலை எழுதி இருந்தார். அந்தப் பாடலில் “ஆடு மாடு மேலே உள்ள பாசம் வீட்டு ரேஷன் கார்டில் பேரை சேர்க்க கேட்கும்” எனும் வரிகள் இடம் பெற்று இருக்கும். அந்த வரியையே மிஞ்சி விட்டது விவசாயக் குடும்பத்தின் கன்றுக்குட்டி பாசம்.

More News

ரஜினிக்கு அனுப்பப்பட்ட சம்மன்: நேரில் ஆஜராவாரா?

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை தொடர்பாக ரஜினிக்கு சம்மன் அனுப்பப்படும் என விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அனிதாவுக்கு இப்படியெல்லாம் கோபம் வருமா? அதிர்ச்சி வீடியோ!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கொடுக்கப்படும் 'மாட்னியா' என்ற டாஸ்க்கில் ஒரு ஹவுஸ்மேட் இன்னொரு ஹவுஸ்மேட் இடம் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்

6 வயது சிறுவன் 11 லட்சத்துக்கு கேம் விளையாடிய சம்பவம்… Ipad வைத்திருப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை!!!

பொதுவா சிறுவர்களிடம் செல்போனைக் கொடுத்தால் யாருக்காவது போன் செய்து விடுவார்கள்,

கொரோனாவால் வரும் புதிய ஆபத்து… எச்சரிக்கையாக இருங்க மக்களே!!!

கொரோனா பாதிப்பு வந்தாலோ அல்லது அறிகுறிகள் இருந்தோலோ அந்த நபருக்கு வாசனை அறியும் திறன் இருக்காது.

இந்த வாரம் மட்டுமல்ல, அடுத்த வாரமும் ஆரி, கேபியை நாமினேட் செய்யும் ஹவுஸ்மேட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடந்த கோழி-நரி டாஸ்க் போட்டியாளர்களுக்கு இடையே பெரும் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியது என்பதும்