அஜித்தை பின்பற்றும் உதயநிதி ஸ்டாலின்!

  • IndiaGlitz, [Thursday,September 09 2021]

அஜித்தின் ’வலிமை’ திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் ’ஆர்டிக்கிள் 15’ திரைப்படத்தின் ரீமேக் பின்பற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

அஜித்தின் ’வலிமை’ திரைப்பட தயாரிப்பாளர் போனிகபூர் தான் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் ’ஆர்டிக்கிள் 15’ என்ற படத்தின் ரீமேக்கையும் தயாரித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ’வலிமை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நேரடியாக மோஷன் போஸ்டர் வெளியிட்டு போனி கபூர் அசத்தினார் என்பது தெரிந்ததே

அதேபோல் தற்போது ’ஆர்டிக்கிள் 15’ படத்தின் மோஷன் போஸ்டர் விரைவில் வெளியிட இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

சமீபத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகியுள்ள உதயநிதி ஸ்டாலின் இடையிடையே தனக்கு ஓய்வு கிடைக்கும் நேரங்களில் ’ஆர்டிக்கிள் 15’ படத்தின் ரீமேக்கில் நடித்து வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ‘கனா’ படத்தை இயக்கிய அருண் ராஜா காமராஜ் இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இணையத்தில் வைரலாகும் ரம்யா பாண்டியன் திருமண புகைப்படம்!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ரம்யா பாண்டியன் திருமண புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீங்க பேசாததை பேசியதுபோல காட்ட முடியும்…. அச்சுறுத்தும் டீப் ஃபேக் செயலி!

தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் ஏரி இருப்பதற்கான ஆதாரத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

'பொன்னியின் செல்வன்' இறுதிக்கட்ட படப்பிடிப்பு எங்கே தெரியுமா?

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்திற்கு வந்துள்ளது.

'சந்திரமுகி 2' படத்தில் வடிவேலு நடிக்கின்றாரா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஜோதிகா, பிரபு உள்பட பலர் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சந்திரமுகி'. இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி

'டாக்டர்' ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டாக்டர்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாக வேண்டும்