close
Choose your channels

'சந்திரமுகி 2' படத்தில் வடிவேலு நடிக்கின்றாரா?

Thursday, September 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஜோதிகா, பிரபு உள்பட பலர் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’சந்திரமுகி’. இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் வசூலில் சாதனை புரிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ’சந்திரமுகி 2’ திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது என்பதும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் இந்த படம் உருவாக உள்ளது என்பதும் தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் ’சந்திரமுகி’ முதல் பாகத்தின் தொடர்ச்சி இந்த படம் கிடையாது என்றும் இது வேறு கதை என்றும் பி வாசு விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் ’சந்திரமுகி’ படத்தில் வடிவேலு காமெடி சூப்பராக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில் ’சந்திரமுகி 2’ படத்திலும் வடிவேலு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தில் வடிவேலு நடிப்பது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே லைகா நிறுவனத்தின் படம் உள்பட ஒருசில படங்களில் வடிவேலு நடிக்கவுள்ள நிலையில் ’சந்திரமுகி 2’ படத்திலும் நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.