close
Choose your channels

அஜித்தை பின்பற்றும் உதயநிதி ஸ்டாலின்!

Thursday, September 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித்தின் ’வலிமை’ திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் ’ஆர்டிக்கிள் 15’ திரைப்படத்தின் ரீமேக் பின்பற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

அஜித்தின் ’வலிமை’ திரைப்பட தயாரிப்பாளர் போனிகபூர் தான் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் ’ஆர்டிக்கிள் 15’ என்ற படத்தின் ரீமேக்கையும் தயாரித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ’வலிமை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நேரடியாக மோஷன் போஸ்டர் வெளியிட்டு போனி கபூர் அசத்தினார் என்பது தெரிந்ததே

அதேபோல் தற்போது ’ஆர்டிக்கிள் 15’ படத்தின் மோஷன் போஸ்டர் விரைவில் வெளியிட இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

சமீபத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகியுள்ள உதயநிதி ஸ்டாலின் இடையிடையே தனக்கு ஓய்வு கிடைக்கும் நேரங்களில் ’ஆர்டிக்கிள் 15’ படத்தின் ரீமேக்கில் நடித்து வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ‘கனா’ படத்தை இயக்கிய அருண் ராஜா காமராஜ் இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.