சென்னையில் மிக அதிக பாதிப்பு: இன்றைய கொரோனா நிலவரம்

தமிழகத்தில் இன்று மட்டும் மேலும் 104 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை 2162 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா தொற்று பாதித்த 104 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 94 பேர் என்பது அதிர்ச்சிக்குரிய தகவல் ஆகும். இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 768ஆக உயர்ந்துள்ளது.

சென்னையை தவிர இன்று செங்கல்பட்டில் 4 பேர்களுக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேர்களுக்கும், விருதுநகரில் இருவருக்கும் திருவாரூரில் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் இன்று புதியதாக யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 82 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும், தமிழகத்தில் இன்று 2 பேர் பலியானதை அடுத்து பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று 8087 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 109,961 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

More News

மத்திய அரசின் அதிரடி உத்தரவால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிம்மதி

கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரங்கில் பெரும் பிரச்சனையாக இருப்பது வெளி மாநிலங்களில் இருந்து வேலை நிமித்தமாக புலம்பெயர்ந்து இருக்கும் தொழிலாளர்கள் தான்.

'மங்காத்தா' படக்காட்சியை கொரோனா விழிப்புணர்வுக்காக பயன்படுத்திய தேனி காவல்துறை!

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் மிக வேகமாக தமிழகத்தில் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை அவ்வப்போது அரசு மற்றும் காவல்துறையினர் சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படுத்தி வருகின்றனர் 

கீர்த்தி சுரேஷின் அடுத்த படத்திற்கு சிக்கலா? பிரபல நடிகரின் தகவலால் பரபரப்பு

நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகை விஜயநிர்மலா வாழ்க்கை வரலாற்றில் நடிக்க

700 கிமீ நடந்து வந்த விழுப்புரம் இளைஞரை கைது செய்த போலீஸ்!

ஹைதராபாத்திலிருந்து சொந்த ஊரான விழுப்புரத்திற்கு சுமார் 700 கிலோமீட்டர் நடந்து வந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பால்கனி அரசு என விமர்சனம் செய்த கமலுக்கு அமைச்சர் பதிலடி

கடந்த சில மாதங்களாகவே உலக நாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டரில் மத்திய, மாநில அரசுகளை சரமாரியாக விமர்சனம் செய்து வருகிறார்.