முதல்வர் பழனிசாமி தான் எங்கள் கடவுள்: 24 அரியர் வைத்திருந்த மாணவரின் வைரல் வீடியோ!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் நடத்த முடியாத நிலையில் சமீபத்தில் கல்லூரி மாணவர்களின் இறுதியாண்டு தேர்வு தவிர அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்து, விண்ணப்ப கட்டணம் கட்டிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இந்த அறிவிப்புக்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது என்பதும், குறிப்பாக ஈரோடு பகுதியை சேர்ந்த மாணவர்கள் முதல்வருக்கு கட்-அவுட் வைத்தும் போஸ்டர்கள் ஒட்டியும் பாராட்டு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் என்ற அருகே கிராப்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த 23 வயது சஞ்சய் நேரு என்ற பொறியியல் கல்லூரி மாணவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் பொறியியல் கல்லூரியில் தற்போது மூன்றாம் ஆண்டு படித்து முடித்துவிட்டு நான்காம் ஆண்டு செல்வதாகவும், தான் மொத்தம் 24 அரியர்கள் வைத்திருப்பதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

மன அழுத்தம் அதிகரித்ததன் காரணமாக பொறியியல் படிப்பை தன்னால் படிக்க முடியவில்லை என்றும் அதனால் அரியர்கள் அதிகரித்து விட்டதாகவும், ஒரு கட்டத்தில் படிப்பை பாதியிலேயே விட்டு விடலாம் என்ற முடிவில் இருந்ததாகவும் அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார். ஆனால் தமிழக முதல்வரின் அறிவிப்பால் தற்போது அனைத்து அரியர்களும் க்ளியர் செய்யப்பட்டு பாஸ் என்ற அறிவிப்பில் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய் உள்ளதாகவும் முதலமைச்சர் தான் எங்கள் கடவுள் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் எங்கள் மீது நம்பிக்கை வைத்த முதலமைச்சருக்கு நன்றி செலுத்தும் வகையில் இனி வரும் தேர்வுகளில் கவனமாக படித்து அரியர் வைக்காமல் தேர்ச்சி பெறுவேன் என்றும் நம்பிக்கையுடன் அந்த மாணவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

24 அரியர் வைத்த மாணவர் ஒருவர், முதல்வரின் ஒரே ஒரு அறிவிப்பால் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மகிழ்ச்சியில் வெளியிட்ட இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

More News

எஸ்பிபி உடல்நிலை: சற்றுமுன் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிஎஸ்கே பந்துவீச்சாளர் உள்பட 13 பேருக்கு கொரோனா: துபாயில் பரபரப்பு

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பம் இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும்

சன்னிலியோனுக்கு சீட் கொடுத்த கொல்கத்தா கல்லூரி: டுவிட்டரில் சன்னிலியோன் அடித்த கமெண்ட்

கொல்கத்தாவில் உள்ள கல்லூரி ஒன்றில் நடிகை சன்னி லியோனிக்கு சீட் கொடுத்து உள்ளதற்கு சன்னி லியோன் டுவிட்டரில் அடித்த கமெண்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

எனது கனவு நனவானது: ஜிவி பிரகாஷின் 'சர்வதேச' தகவல்

கோலிவுட் திரையுலகில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என்ற இரண்டு துறையிலும் பிசியாக இருந்து வருபவர் ஜிவி பிரகாஷ் என்பது தெரிந்ததே. அவர் தற்போது ஒரே நேரத்தில் சுமார் ஒன்பது படங்களில் நடித்து வருகிறார்

ஸ்ரீகாந்த் ஜோடியாக 'தடம்' பட நடிகை: டைட்டில் அறிவிப்பு

'ரோஜா கூட்டம்' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'ஏப்ரல் மாதத்தில்' 'போஸ்' 'கனா கண்டேன்' 'மெர்குரி பூக்கள்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் ஸ்ரீகாந்த்.