சூரரை போற்று' படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்!

  • IndiaGlitz, [Saturday,September 05 2020]

சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன்னரே முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் 30ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸாகவிருப்பதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட் ஆகின என்பது தெரிந்ததே. இந்த் படத்தில் இடம்பெற்ற நான்கு பாடல்களில் ‘வெய்யோன் சில்லி’ மற்றும் ‘காட்டுப்பயலே’ பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.

இந்த நிலையில் இந்த படத்தில் கூடுதலாக சில பாடல்கள் இணைக்கப்படும் என்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கூறியிருந்த நிலையில் தற்போது மேலும் 3 அற்புதமான பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். புதியதாக இணைக்கப்பட்டுள்ள இந்த பாடல்கள் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் முறைப்படி அறிவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளன்ர.

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ளனர். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

கேப்டன் யார் என்பதை காலம் முடிவு செய்யும்: ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து அரசியல் பெண் பிரமுகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் நவம்பர் மாதம் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி அரசியல் களத்தில் குதிக்கவுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசியூவில் கேக் வெட்டிய எஸ்பிபி: குடும்பத்தினர், டாக்டர்கள் மகிழ்ச்சி

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்

'தனுஷ் 43' படம் குறித்து சூப்பர் அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்!

தனுஷின்'அசுரன்' மற்றும் 'பட்டாஸ்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர்ஹிட்டாகிய நிலையில் தற்போது அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய'ஜெகமே தந்திரம்' மற்றும் மாரி செல்வராஜ் இயக்கிய 'கர்ணன்

ஆசிரியர் கேரக்டர்களில் அசத்திய தமிழ் திரையுலக பிரபலங்கள்!

இன்று நாடு முழுவதும் ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் ஆசிரியர் கேரக்டர்களில் நடித்தது குறித்து தற்போது பார்ப்போம்

நடிகை குஷ்புவின் டிசைன் டிசைனான மாஸ்க் புகைப்படங்கள்: இணையத்தில் வைரல்

இந்த கொரோனா வைரஸ் காலத்தில் மாஸ்க் அணிவது என்பது இன்றியமையாத ஒன்று என்றும், உலக சுகாதார மையம் முதல் உள்ளூர் சுகாதாரத்துறை வரை மாஸ்க் அணிதல்