close
Choose your channels

இது சோனியா அகர்வாலின் '7G'.. த்ரில்லரான டிரைலர் ரிலீஸ்..!

Wednesday, February 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடித்த '7ஜி ரெயின்போ காலனி’ என்ற திரைப்படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் அடுத்த பாகம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சோனியா அகர்வால் நடித்த '7G'என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் ஒரு நிமிட டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சோனியா அகர்வால் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் முக்கிய கேரக்டர்களில் நடித்த இந்த படத்தை ஹரூன் என்பவர் இயக்கி வருகிறார்.

கண்ணா ஒளிப்பதிவில் டான் போஸ்கோ படத்தொகுப்பில் சித்தார்த் விபின் இசையமைப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசரே அசத்தலாக இருக்கும் நிலையில் இந்த படமும் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் சோனியா அகர்வாலுக்கு ஒரு நல்ல ரீஎண்ட்ரி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment