close
Choose your channels

'96' 'ராம்' தங்கைக்கு திருமணம்: மாப்பிள்ளை தொழிலதிபர்

Friday, June 14, 2019 • தமிழ் Comments

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படத்தில் ஜூனியர் ராம் கேரக்டரில் நடித்திருந்தவர் ஆதித்யா. இவர் பிரபல குணசித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆவார். இந்த நிலையில் எம்.எஸ்.பாஸ்கர் மகளும், ஆதித்யா தங்கையுமான ஐஸ்வர்யாவின் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றுள்ளது

பிரபல தொழிலதிபர் சுதாகர் என்பவரின் மகன் அகுல் தான் மாப்பிள்ளை. சென்னையில் நடந்த அகுல்-ஐஸ்வர்யா திருமண நிச்சயதார்த்தத்தில் நடிகர் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். விரைவில் இவர்களது திருமண தேதி அறிவிக்கப்படவுள்ளது

மணமகள் ஐஸ்வர்யா டப்பிங் கலைஞராக பணிபுரிந்து கொண்டிருக்கின்றார் என்பதும் இவர் பல முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.எஸ்.பாஸ்கர் அவர்களும் பல ஆங்கில படங்களின் தமிழ்ப்பதிப்பிற்கு டப்பிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

Get Breaking News Alerts From IndiaGlitz