சிவகார்த்திகேயனுடன் மோதும் விஷால்

  • IndiaGlitz, [Sunday,April 30 2017]

தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் செயலாளர் பணி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பணி ஆகியவற்றுக்கு இடையே விஷால் தற்போது 'துப்பறிவாளன்,' இரும்புத்திரை' மற்றும் கருப்பு ராஜா வெள்ளை ராஜா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் 'துப்பறிவாளன்' படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 11 என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் விஷால் நடித்து வரும் இன்னொரு படமான 'இரும்புத்திரை' படத்தின் பாடல்கள் மற்றும் படம் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

'இரும்புத்திரை' படத்தின் பாடல்கள் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி விஷாலின் பிறந்த நாள் அன்று வெளிவரவுள்ளது. அதேபோல் இந்த படம் உலகம் முழுவதும் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி ஆயுதபூஜை விடுமுறை தினத்தில் வெளியாகவுள்ளது. செப்டம்பர் 29ஆம் தேதி சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' ரிலீஸ் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஷாலின் 'துப்பறிவாளன்' ரிலிஸ் தேதி

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கி வரும் 'துப்பறிவாளன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்முறையாக விஷால்-மிஷ்கின் இணைந்துள்ள இந்த விறுவிறுப்பான த்ரில் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது...

'பாகுபலி 2' படத்துக்கு ராஜமெளலியின் சம்பளம் ரூ.100 கோடியா?

பிரமாண்ட இயக்குனரின் பிரமாண்ட திரைப்படமான 'பாகுபலி 2' படத்தின் சுனாமி இன்னும் ஊடகங்களில் நிற்கவில்லை...

ரஜினிக்கு 'சந்திரமுகி', விஜய்க்கு 'தளபதி 61'. தயாரிப்பாளர் முரளி ராமசாமி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று 'சந்திரமுகி'. குறிப்பாக 'பாபா' என்ற தோல்வி படத்திற்கு பின்னர் ரஜினி மீது பல எதிர்மறை விமர்சனங்கள் எழுந்த நிலையில், தான் யானை இல்லை குதிரை, விழுந்தா டக்குன்னு எழுந்திருச்சிருவேன்' என்று சொன்னதை செய்து காட்டிய படம் 'சந்திரமுகி. இந்த படம் சென்னை ச

விருது பெற்ற குழந்தை நட்சத்திரத்தின் வாழ்நாள் லட்சியத்தை நிறைவேற்றிய விஜய்

இளையதளபதி விஜய் கடந்த இரண்டு நாட்களாக ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். நேற்று இயக்குனர் ரவிகுமார் உள்பட பல பிரபலங்களும், ரசிகர்களும் விஜய்யுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்...

'விவேகம்' படத்தின் செகண்ட் லுக் இதுதானா?

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியாகி தெறிக்க வைத்தது. உலகம் முழுவதிலும் உள்ள அஜித் ரசிகர்கள் ஃபர்ஸ்ட்லுக்கை இரண்டு நாட்கள் டுவிட்டர் டிரெண்டில் வைத்திருந்தனர்...