close
Choose your channels

சிவகார்த்திகேயனுடன் மோதும் விஷால்

Sunday, April 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் செயலாளர் பணி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பணி ஆகியவற்றுக்கு இடையே விஷால் தற்போது 'துப்பறிவாளன்,' இரும்புத்திரை' மற்றும் கருப்பு ராஜா வெள்ளை ராஜா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் 'துப்பறிவாளன்' படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 11 என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் விஷால் நடித்து வரும் இன்னொரு படமான 'இரும்புத்திரை' படத்தின் பாடல்கள் மற்றும் படம் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

'இரும்புத்திரை' படத்தின் பாடல்கள் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி விஷாலின் பிறந்த நாள் அன்று வெளிவரவுள்ளது. அதேபோல் இந்த படம் உலகம் முழுவதும் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி ஆயுதபூஜை விடுமுறை தினத்தில் வெளியாகவுள்ளது. செப்டம்பர் 29ஆம் தேதி சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' ரிலீஸ் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.