மணிகண்டனின் 'லவ்வர்' படத்திற்கு பாட்டு பாடிய பிரபல நடிகர்: உருகி உருகி பாடிய பாடல்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
மணிகண்டன் நடித்த ‘லவ்வர்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த பாடலை பிரபல நடிகர் ஒருவர் பாடியுள்ளார் என்பதுதான் ஆச்சரியமான தகவல்.
‘குட் நைட்’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் மணிகண்டன் நடிப்பில் பிரபு வியாஸ் என்பவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லவ்வர்’. இந்த படம் காதலர் தினம் விருந்தாக வரும் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது. அதே நாளில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’லால் சலாம்’ படமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை பிரபல நடிகர் சித்தார்த் உருகி உருகி பாடியுள்ளார் என்பதும் இசையமைப்பாளர் சீல் ரோல்டன் கம்போஸ் செய்த இந்த பாடலை அவரே எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சித்தார்த் ஏற்கனவே பல திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு பாடல் பாடியுள்ளார் இந்த பாடலின் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மணிகண்டன், ஸ்ரீ கௌரிப்ரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவில், பரத் விக்ரமன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments