close
Choose your channels

#TheGOAT ஹேஷ்டேக்குடன் வெங்கட் பிரபு பகிர்ந்த புகைப்படம்.. ஏதோ அப்டேட் இருக்குது..!

Tuesday, January 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ என்ற படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு தனது சமூக வலை தளத்தில் #TheGOAT என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்து, அவரும் யுவன் சங்கர் ராஜாவும் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’கோட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த புத்தாண்டு தினத்தில் வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்த நிலையில் அடுத்த கட்டமாக சிங்கிள் பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் சில பாடல்களை யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்து முடித்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வெங்கட் பிரபு சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் இருந்து ‘கோட்’ படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பதிவின் பின்னணியில் அவர் கமல்ஹாசன் நடித்த ’தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தின் பாடலையும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos