close
Choose your channels

'தலைவர் 171' படத்தில் இந்த பிரபல நடிகரும் இணைகிறாரா? சம்பவம் செய்ய காத்திருக்கும் லோகேஷ்..!

Saturday, April 20, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படத்தில் ஏற்கனவே சில பிரபலங்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபலம் நடிக்க இருப்பதாக கூறப்படுவதை அடுத்து லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் ஒரு தரமான சம்பவம் செய்ய காத்திருப்பதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் ‘தலைவர் 171’. இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

குறிப்பாக கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அது மட்டுமின்றி நீண்ட இடைவெளிக்கு பிறகு சத்யராஜ், ரஜினியுடன் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் அவரை நேரில் சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

நாகார்ஜுனா ஏற்கனவே தற்போது தனுஷ் உடன் ’குபேரா’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் ரஜினியின் ‘தலைவர் 171’ படத்தில் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.