'தளபதி 63' படம் குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Saturday,May 04 2019]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் ஆரம்பித்த நிலையில் இதுவரை இந்த படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. குறிப்பாக 3ஆம் கட்ட படப்பிடிப்பு தொடர்ச்சியாக 70 நாட்கள் நடைபெற்றுள்ளது

இந்த நிலையில் நான்காம் கட்ட படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுக்கள் விரைவில் வெளிவரவிருப்பதாகவும், அதுவரை விஜய் ரசிகர்கள் எந்தவித வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், ரசிகர்களின் முன் மிகச்சிறந்த விருந்தாக இந்த படத்தை வைக்க வேண்டும் என்பதற்காக அட்லியும் அவரது குழுவினர்களும் இரவுபகலாக உழைத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

10 வருடத்திற்கு பின் சந்தித்த காதலிக்காக மனைவியை கொலை செய்த டெல்லி எஞ்சினியர்!

பள்ளிக்காலத்தில் பழகிய காதலியை பத்து வருடங்களுக்கு பின் சந்தித்த டெல்லியை சேர்ந்த எஞ்சினியர், காதலிக்காக தனது மனைவியை கொலை செய்த கொடூர சம்பவம் குறித்த அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது

இயக்குனர் விஷ்ணுவர்தனின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!

தல அஜித் நடித்த 'பில்லா', 'ஆரம்பம்' உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்தன் கடந்த சில  மாதங்களாக இந்தி படம் ஒன்றை இயக்குவதற்கான

இயக்குனர் சுசீந்திரனின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்

'வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் இயக்குனராகி அதன் பின் பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன் தற்போது 'கென்னடி கிளப்', 'வெண்ணிலா கபடிக்குழு 2', 'ஏஞ்சலினா', மற்றும் 'சாம்பியன்'

 பெண்கள் சலூனில் ஷேவிங் செய்த சச்சின் தெண்டுல்கர்

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒருவர் சலூன் கடை நடத்தி வந்தார். ஆனால் திடீரென ஒருநாள் அவர் எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்துவிட்டார்.

எரியும் நெருப்பில் குதித்த போலீஸ் அதிகாரி! சமூக வலைத்தளங்களில் வைரல்

தீ விபத்து ஒன்றில் வீடு ஒன்று கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும்போது எரியும் வீட்டுக்குள் குதித்த காவல்துறை எஸ்.ஐ ஒருவர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.