close
Choose your channels

இயக்குனர் விஷ்ணுவர்தனின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!

Saturday, May 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த 'பில்லா', 'ஆரம்பம்' உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்தன் கடந்த சில மாதங்களாக இந்தி படம் ஒன்றை இயக்குவதற்கான ஆரம்பகட்ட பணியில் இருந்தார். கார்கில் போரின் ஹீரோ என்று அழைக்கப்பட்ட விக்ரம் பாத்ரா அவர்களின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களே இந்த படம்.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை தற்போது விஷ்ணுவர்தன் அறிவித்துள்ளார். இந்தியில் தயாராகும் இந்த படத்திற்கு 'ஷேர்ஷா' (Shershaah) என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சித்தார்த் மல்ஹோத்ரா, கைரா அத்வானி முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண்ஜோஹர் தயாரிக்கவுள்ளார்.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் முடிந்துவிட்டதாகவும், வெகுவிரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், இந்த படத்தை உருவாக்க முழு ஒத்துழைப்பு கொடுத்த விக்ரம் பாத்ரா அவர்களின் குடும்பத்திற்கு நன்றி என்றும் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.