close
Choose your channels

'எதற்கும் துணிந்தவன்' படம் பார்க்க சென்ற விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

Thursday, March 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகியிருக்கும் நிலையில் இந்த படத்திற்கு யூடியூப் விமர்சகர்கள், ஊடகங்கள் மற்றும் இணைய தளங்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருவதால் இந்த படம் சூப்பர் ஹிட் என்பது உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் பார்த்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெரும்பாலான திரையரங்குகளில் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் இடைவேளையின் போது விஜய் நடித்த’ பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் ஒளிபரப்பானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ’எதற்கும் துணிந்தவன்’ படம் பார்க்கச் சென்ற விஜய் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விஜyயின் பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் உலகம் முழுவதும் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ள நிலையில் தற்போது ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் இடைவேளையில் திரையரங்குகளில் திரையிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.