அசோக்குமார் தற்கொலை எதிரொலி: அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை

  • IndiaGlitz, [Wednesday,November 22 2017]

நடிகர், இயக்குனர் சசிகுமாரின் நெருங்கிய உறவினர் அசோக்குமார் நேற்று கந்துவட்டி கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே ஜி.வி.உள்பட பல திரையுலக பிரபலங்கள் கந்துவட்டி கொடுமைக்காரர்களின் மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த தற்கொலையால் திரையுலகமே வெகுண்டெழுந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சசிகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் பைனான்சியர் அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அன்புச்செழியன் தலைமறைவாகிவிட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கவே, தற்போது போலீசார் தனிப்படை ஒன்றை அமைத்து அன்புச்செழியனை தேடி வருகின்றனர்

அசோக்குமார் தற்கொலைக்கு காரணமானவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த திரையுலகினர்களும் கோரிக்கை வைத்துள்ளதை அடுத்து காவல்துறையினர் இந்த வழக்கை தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

More News

கந்துவட்டி கொடுமைக்கு இதுவே கடைசி பலியாக இருக்கட்டும்: விஷால்

இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் பைனான்சியர் ஒருவரின் மிரட்டல் காரணமாக நேற்று தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழ் திரையுலகையே அதிர்ச்சி அடைந்துள்ளது

சசிகுமார் உறவினர் அசோக் தற்கொலை: திரையுலக பிரபலங்கள் இரங்கல்

சசிகுமாரின் நெருங்கிய உறவினரும் அவருடைய கம்பெனி புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகியுமான அசோக்குமார் நேற்று மாலை பைனான்சியர் ஒருவரின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

இரண்டாவது தற்கொலை: இயக்குனர் சசிகுமார் நெருக்கமானவர்களுக்கு தொடரும் சோகம்

பிரபல இயக்குனர், நடிகர் சசிகுமாரின் மேனேஜர் உதயகுமார் என்பவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று அவருடைய நெருங்கிய உறவினர் அசோக் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்

8வது வருடமாக ஒன்றுகூடிய 80களின் நட்சத்திரங்கள்

80களில் கொடிகட்டிப் பறந்த தென்னக திரையுலக பிரபலங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒன்று கூடி கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தொடர்ந்து 8வது ஆண்டாக இந்த ஆண்டும் ஒன்று கூடியுள்ளனர்.

அதர்வாவின் 'செம போதை ஆகாதே' டிராக் லிஸ்ட்

அதர்வா தயாரித்து நடிக்கும் 'செம போதை ஆகாதே' படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நாளை வெளியாகவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.