close
Choose your channels

அதர்வாவின் 'செம போதை ஆகாதே' டிராக் லிஸ்ட்

Tuesday, November 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதர்வா தயாரித்து  நடிக்கும் 'செம போதை ஆகாதே' படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நாளை வெளியாகவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தின் டிராக்லிஸ்ட் வெளிவந்துள்ளது. யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளது.

1. செம போதை ஆகாதே' என்று தொடங்கும் முதல் பாடலை இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா பாடியுள்ளார். இந்த பாடலை ரோகேஷ் மற்றும் பத்ரி வெங்கடேஷ் எழுதியுள்ளனர்.

2. ஐட்டம்காரன்' என்று தொடங்கும் 2வது பாடலை ரஞ்சித் மற்றும் அனிதா பாடியுள்ளனர். இந்த பாடலை ரோகேஷ் எழுதியுள்ளார்

3. இதயத்தை ஒரு நொடி' என்று தொடங்கும் 3வது பாடலை யுவன்ஷங்கர் ராஜா பாட, நிரஞ்சன் பாரதி எழுதியுள்ளார்

4. 'காலி பண்ணுற' என்ற பாடலை ரம்யா நம்பீசன் பாட, பத்ரி வெங்கடேஷ் எழுதியுள்ளார்.

இந்த நான்கு பாடல்களுடன் யுவன்ஷங்கர் ராஜாவின் ஒரு அட்டகாசமான தீம் மியூசிக் இந்த படத்தின் ஆல்பத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.