close
Choose your channels

இயக்குனர் பாரதிராஜாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்: என்ன செய்தார் தெரியுமா?

Saturday, September 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று தற்போது டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ள நிலையில் அவரது வீட்டிற்கு திடீரென தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் சென்றது பாரதிராஜாவின் குடும்பத்தினர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்ததாக கூறப்படுகிறது.

இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவரது உடல்நிலை தேறி வந்ததாகவும் கூறிய மருத்துவமனை நிர்வாகம் சமீபத்தில் அவரை டிஸ்சார்ஜ் செய்ததாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன இயக்குனர் பாரதிராஜா சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார் என்றும் அவர் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பாரதிராஜாவின் வீட்டிற்கு நேரில் சென்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உடல் நலம் குறித்து விசாரித்தார். அவரது திடீர் வருகை பாரதிராஜாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாரதிராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது தொலைபேசியில் அவரிடம் தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.