close
Choose your channels

வெற்றிமாறனின் 'விடுதலை' திரைப்படத்தில் ரஜினி-கமல்? என்ன செய்யறாங்க தெரியுமா?

Saturday, September 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ’விடுதலை’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து உள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன், ராஜீவ்மேனன் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் ’விடுதலை’ திரைப்படம், ஆரம்பத்தில் ஒரே பாகமாகவே எடுக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு வருவதாகவும் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’விடுதலை’ திரைப்படத்திற்காக கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து ஒரு பாடலை பாடி இருப்பதாக கூறப்படுகிறது. இசைஞானி இளையராஜாவின் இசையில் இருவரும் பாடிய இந்த பாடல் குறித்து அப்டேட் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் நடிகர் தனுஷ் ஒரு பாடலை பாடியதாக செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.