ஆரி-ஐஸ்வர்யா தத்தா படத்தின் டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,January 15 2019]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் இடத்தை பெற்ற ஐஸ்வர்யா தத்தா, மகத்துடன் 'நல்லவன்னு பேர் எடுத்த கெட்டவன்டா' என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் அவர் ஆரியுடன் ஒரு படத்திலும் நடித்து வருவதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது 'அலேகா' என்று அறிவிக்கப்பட்டு டைட்டில் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த படத்தை 'அய்யனார்' படத்தை இயக்கிய ராஜமித்ரன் இயக்கவுள்ளார். ஏ.ஜி.மகேஷ் இசையில், தில்ராஜ் ஒளிப்பதிவில் கார்த்திக் ராம் படத்தொகுப்பில் யுவபாரதியின் பாடல் வரிகளில் இந்த படம் உருவாகவுள்ளது.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் வெளிநாடு செல்லவுள்ளனர்.

 

More News

'இந்தியன் 2' படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

கடந்த 1996ஆம் ஆண்டு கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் இணைந்த 'இந்தியன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து 22 வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது

யுவன்ஷங்கர் ராஜாவின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

பிரபல இசையமைப்பாளரான யுவன்ஷங்கர் ராஜா சமீபகாலமாக படங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது தெரிந்ததே. அவரது தயாரிப்பில் வெளிவந்த முதல் படமான 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியது.

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திரை நட்சத்திரங்கள் யார் யார்?

தேசிய அரசியலிலும் சரி, மாநில அரசியலிலும் சரி நடிகர், நடிகைகளின் பங்கு நிச்சயம் அதிகளவில் இருக்கும் என்பதை கடந்த சில ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்.

பிரபல நடிகரின் தங்கை கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ்

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் கடந்த ஆண்டு 'லட்சுமி', 'சாமி 2', 'செக்க சிவந்த வானம்', 'வடசென்னை' மற்றும் 'கனா' போன்ற படங்களில் நடித்தார்.

'பேட்ட' படத்தை முந்தியதா 'விஸ்வாசம்' வசூல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'பேட்ட' திரைப்படமும், தல அஜித் நடிப்பில் 'விஸ்வாசம்' திரைப்படமும் கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது.