close
Choose your channels

'இந்தியன் 2' படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

Tuesday, January 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 1996ஆம் ஆண்டு கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் இணைந்த 'இந்தியன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து 22 வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசனின் ரசிகர்களுக்கு இன்றைய பொங்கல் விருந்தாக அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான 'இந்தியன் 2' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது. வர்மக்கலையின் குறியீட்டுடன் கூடிய இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன், காஜல் அகர்வால் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். லைகாவின் பிரமாண்டமான தயாரிப்பில் ரவிவர்மனின் ஒளிப்பதிவில் ஜெயமோகன் மற்றும் கபிலன் வைரமுத்துவின் வசனத்தில் ஸ்ரீகர் பிரசாத்தின் ஒளிப்பதிவில் முத்துராஜின் கலை இயக்கத்தில் இந்த படம் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.