close
Choose your channels

'பேட்ட' படத்தை முந்தியதா 'விஸ்வாசம்' வசூல்

Monday, January 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'பேட்ட' திரைப்படமும், தல அஜித் நடிப்பில் 'விஸ்வாசம்' திரைப்படமும் கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது. இரண்டு படங்களும் நல்ல வசூலையும், நல்ல விமர்சனத்தையும் பெற்று வந்தாலும் வழக்கம்போல் வசூல் தகவல்கள் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரியதாகி வருகிறது.

இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களில் ரஜினியின் 'பேட்ட' திரைப்படம் சென்னையில் ரூ.4.81 கோடி வசூல் செய்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் சுமார் ரூ.35 கோடி குறிப்பாக செங்கல்பட்டு 9.1 கோடி, கோவை ரூ.5.95 கோடி நெல்லை-குமரியில் ரூ.1.7 கோடி வசூல் செய்துள்ளது. மொத்தத்தில் உலக அளவில் இந்த படம் சுமார் ரூ.92 கோடி வசூல் செய்துள்ளதாகவும் இன்றைய வசூலையும் சேர்த்தால் ரூ.100 கோடி வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தல அஜித்தின் 'விஸ்வாசம்' திரைப்படம் சென்னையில் ரூ.3.83 கோடி வசூல் செய்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் ரூ.42 கோடி குறிப்பாக செங்கல்பட்டில் ரூ.9.6 கோடி, கோவையில் ரூ.6.85 கோடி, நெல்லை-குமரியில் ரூ.2.01 கோடி வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் இந்த படம் ரூ.68 கோடி வசூல் செய்துள்ளது.

மொத்தத்தில் தமிழகத்தில் விஸ்வாசமும், உலக அளவில் பேட்ட படமும் அதிக வசூலை குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.