பெண் கண்டக்டர் மீது ஆசிட் வீச்சு: பைக்கில் வந்த மர்ம நபர்கள் யார்?

  • IndiaGlitz, [Friday,December 20 2019]

பெங்களூரு அரசு பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வரும் பெண் மீது 2 மர்ம நபர்கள் திடீரென ஆசிட் வீசி விட்டு தப்பி ஓடிவிட்ட சம்பவம் பெங்களூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பெங்களூர் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷனில் கண்டக்டராக பணிபுரிந்து வரும் 35 வயது பெண் இந்திராபாய் எனப்வர் இன்று அதிகாலை சுமார் 5.45 மணி அளவில் வேலைக்கு செல்வதற்காக சென்று கொண்டு இருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 நபர்கள் அவருக்கு மிக அருகில் வந்து திடீரென அவரது முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு மாயமாய் மறைந்துவிட்டார்கள்

ஆசிட் வீச்சினால் முகம் மற்றும் உடல் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்திரா பாய் அலறி துடித்தார். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து அவருக்கு அதிக அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்

இந்திராபாயின் கணவர் பாலாஜி என்பவரும் பெங்களூர் அரசு பேருந்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்திராபாய் மீது ஆசிட் வீசியது யார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

More News

சென்னை கல்லூரி பேராசிரியை தற்கொலையில் திடீர் திருப்பம்: காதல் தோல்வியா?

சென்னையில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் அந்த கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்த ஒருவர் திடீரென சமீபத்தில் வகுப்பறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம்

ரஜினி அப்படியே சொல்லவே இல்லை: அமைச்சர் ஜெயகுமார்

மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகின்றன. குறிப்பாக மாணவர்களின் போராட்டம் மிகப்பெரிய அளவில்

"5 வருடம் முன் இருந்த பொருளாதார பேரழிவை நாங்கள் தான் சரி செய்திருக்கிறோம்"..! பிரதமர் மோடி.

டெல்லியில் நடைபெறும் அசோசம் (ASSOCHAM - Associated Chambers of Commerce and Industry of India) அமைப்பின் 100-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்

உலக வரலாற்றில் இதுதான் ஆச்சரியம்: பிக்பாஸ் ஆர்த்தி

மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த குடியை குடியுரிமை சட்ட மசோதா, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்பட்ட நிலையில்

'பட்டாஸ்' படம் குறித்த அட்டகாசமான அறிவிப்பு

தனுஷ் நடித்த 'பட்டாஸ்' திரைப்படம் வரும் ஜனவரி 16-ம் தேதி ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.