close
Choose your channels

'பட்டாஸ்' படம் குறித்த அட்டகாசமான அறிவிப்பு

Friday, December 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ திரைப்படம் வரும் ஜனவரி 16-ம் தேதி ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்டன.

ஏற்கனவே ‘பட்டாஸ்; திரைப்படத்தின் சிங்கிள் பாடலான ‘சில்புரோ’ என்ற தனுஷ் பாடிய பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடல் வரும் நாளை காலை 11.30 மணிக்கு வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது. விவேக் மெர்வின் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதி உள்ளார்.

தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, ஜெகபதிபாபு, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் பிரகாஷ்பாபு படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.