close
Choose your channels

ஆக்சன்கிங் அர்ஜூன் வீட்டில் நிகழ்ந்த சோகம்: திரையுலகினர் இரங்கல்!

Sunday, February 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆக்சன் கிங் அர்ஜுன் வீட்டில் நடந்த சோகத்தை அடுத்து திரையுலகினர் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்களின் மாமனாரும் பழம்பெரும் கன்னட நடிகருமான ராஜேஷ் என்பவர் நேற்று காலமானார். அவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் நேற்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கன்னட திரையுலகினர் மறைந்த நடிகர் ராஜேஷ்க்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த நடிகர் ராஜேஷின் மகளும் கன்னட நடிகையுமான ஆஷா ராணி, ஆக்சன் கிங் அர்ஜுனை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் ராஜேஷ் மறைவை அடுத்து அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.