ஆக்சன்கிங் அர்ஜூன் வீட்டில் நிகழ்ந்த துக்க நிகழ்ச்சி: திரையுலகினர் இரங்கல்!

  • IndiaGlitz, [Saturday,July 23 2022]

ஆக்சன் கிங் அர்ஜுன் வீட்டில் நிகழ்ந்த துக்க நிகழ்ச்சியை அடுத்து ஒட்டுமொத்த திரையுலகம் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றது.

நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவம்மா அவர்கள் இன்று காலமானார். அவருக்கு வயது 85.

கடந்த சில நாட்களாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகினர் அர்ஜுனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

மறைந்த தேவம்மா அவர்களின் கணவரும் அர்ஜுனின் தந்தையுமான சக்தி பிரசாத் ஒரு கன்னட நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. சக்தி பிரசாத் - லட்சுமி தேவம்மா தம்பதிக்கு கிஷோர் சார்ஜா, அர்ஜுன் சார்ஜா ஆகிய 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மைசூரில் உள்ள பள்ளி ஒன்றில் லட்சுமி தேவம்மா ஆசிரியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் அடுத்த ரிலீஸ் இந்த பிரபலத்தின் படமா?

கடந்த சில மாதங்களாக உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 

மூன்று படங்களும் தோல்வி, இனிமேல் சினிமாவை இயக்க மாட்டேன்: கமல் பட இயக்குனர் அறிவிப்பு

கமல்ஹாசன் படம் உள்பட மூன்று படங்களை இயக்கிய இயக்குனர் தனது மூன்று படங்களும் எதிர்பார்த்த பலனை தரவில்லை என்பதால் இனிமேல் சினிமாவை இயக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

தேசிய விருது பெற்ற சூர்யா ரசிகர்களுக்கு கலைப்புலி எஸ் தாணுவின் அசத்தல் பரிசு!

நடிகர் சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' என்ற திரைப்படம் ஐந்து தேசிய விருதுகளை பெற்றது என்பதும் குறிப்பாக சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம் 

பணம், பெயர், பெரிய அரசியல்வாதியை பார்த்தவன் நான், ஆனாலும் சந்தோஷம் இல்லை: ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, 'பணம், புகழ் மற்றும் பெரிய பெரிய அரசியல்வாதிகளை நான் பார்த்தவன்

என் ஜோதிகாவிற்கு தேசிய விருதை அன்புடன் உரித்தாக்குகிறேன்: சூர்யாவின் நெகிழ்ச்சி அறிக்கை

 நேற்று 68வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவுக்கு கிடைத்தது என்பது மட்டுமின்றி அவர் நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படத்திற்கு மொத்தம் ஐந்து விருதுகள்