அதே எனர்ஜி, அதே டான்ஸ்: தளபதி விஜய்யை 'வாரிசு' செட்டில் பார்த்த பிரபலத்தின் டுவிட்!

தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ‘வாரிசு’ படத்தின் செட்டில் விஜய்யை பார்த்த பிரபலம் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ’அதே எனர்ஜி அதே டான்ஸ்’ என விஜய்யை புகழ்ந்து டுவிட்செய்து உள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில், தமன் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் தற்போது இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்றும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் சற்று முன் இயக்குனர் மற்றும் குணச்சித்திர நடிகர் மனோபாலா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தளபதி விஜய்யை சந்தித்தேன் என்றும் அவரது டான்ஸ் பர்பாமன்ஸ் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன், பல வருடங்களுக்கு முன் இருந்த அதே டான்ஸ் அதே எனர்ஜியை பார்த்தேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் விஜய்யுடன் 15 நிமிடம் பேசியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது மட்டுமின்றி புத்துணர்ச்சியாகவும் இருந்தது என்றும் தெரிவித்துள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகிறது. மேலும் ‘வாரிசு’ திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என்றும் மரியாதை நிமித்தமாகவே விஜய்யை பார்க்க சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா உள்பட பலர் நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது.

More News

ஐஸ்வர்யா ரஜினியின் அடுத்த படத்தின் பூஜை.. ஹீரோ, தயாரிப்பாளர் யார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கும் அடுத்த படத்தின் பூஜை நவம்பர் முதல் வாரம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

40 வயதில் வேற லெவல் கிளாமர்: மீரா ஜாஸ்மின் கிளாமரால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

நடிகை மீரா ஜாஸ்மின் கடந்த சில மாதங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவல் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து வரும் நிலையில் சற்று முன் அவர்

குடும்பத்துடன் 'நாசா'வுக்கு சென்ற தமிழ் திரையுலக பிரபலம்: வைரல் புகைப்படம்

தமிழ் திரை உலக பிரபலம் ஒருவர் தனது குடும்பத்துடன் சமீபத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்ற நிலையில் அமெரிக்காவில் உள்ள நாசாவுக்கு சென்ற புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

சூர்யாவை போல் கிளைமாக்ஸில் சிறப்பு தோற்றத்தில் சூரி: எந்த படத்தில் தெரியுமா?

சமீபத்தில் வெளியான உலகநாயகன் கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படத்தில் கிளைமாக்ஸில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார் என்பதும் அந்த பத்து நிமிட காட்சி படத்தின் மிகப்பெரிய

சிம்புவின் அடுத்த படத்தை இயக்குவது அஜித்-விஜய் பட இயக்குனரா? பேச்சுவார்த்தை ஆரம்பம்!

அஜித், விஜய் ஆகிய இருவரது சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனரின் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.