close
Choose your channels

ஐஸ்வர்யா ரஜினியின் அடுத்த படத்தின் பூஜை.. ஹீரோ, தயாரிப்பாளர் யார்?

Thursday, October 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கும் அடுத்த படத்தின் பூஜை நவம்பர் முதல் வாரம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் நடித்த ‘3’ மற்றும் கெளதம் கார்த்திக் நடித்த ’வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கினார். இதனை அடுத்து அவர் அடுத்த படத்தை விரைவில் இயக்குவார் என்று செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வரும் நவம்பர் முதல் வாரத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற உள்ளதாகவும் அதனை அடுத்து படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் அடுத்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு பூஜை தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் பாலிவுட் படம் குறித்த அறிவிப்பு வெளியானது. 'ஓ சாதிசால்’ என்ற டைட்டில் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படம் குறித்த தகவல்கள் அதன்பின் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.