close
Choose your channels

மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரருக்கு கொரோனா: மனைவிக்கும் பாசிட்டிவ் என தகவல்

Wednesday, July 15, 2020 • தமிழ் Comments

பிரபல கன்னட நடிகரும், நடிகை மேக்னா ராஜின் கணவருமான சிரஞ்சீவி சார்ஜா சமீபத்தில் திடீரென மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார் என்பதும் அவரது மறைவு கன்னட திரையுலகை மட்டுமின்றி தென்னிந்திய திரை உலகையே அதிர்ச்சி அடைய செய்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரரும் கன்னட திரையுலகின் ஆக்சன் ஹீரோவான துருவா சார்ஜாவுக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்தூள்ளது. இதனால் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதுகுறித்து துருவா சார்ஜா தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: எனக்கும் எனது மனைவிக்கும் லேசான கொரோனா அறிகுறி உள்ளது. இதனால் நாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோம். இருவரும் நலமாக இருக்கின்றோம். விரைவில் குணமாகிவிடுவோம் என்பது எங்களுக்கு தெரியும். இருப்பினும் எங்களுடன் நெருக்கமாக இருந்த அனைவரும் தயவுசெய்து உங்களை சோதித்துப் பாதுகாப்பாக இருங்கள்’ என்று கூறியுள்ளார்.

Get Breaking News Alerts From IndiaGlitz