close
Choose your channels

ஒரு வருஷம் முடிஞ்சிருச்சு: நடிகர் மகத் பதிவு செய்த க்யூட் புகைப்படங்கள்!

Monday, June 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் மகத் தனது குழந்தைக்கு ஒரு வயது முடிந்துவிட்டது என்று கூறி குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

சிம்புவின் நெருங்கிய நண்பரும், நடிகரும், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மகத், தமிழ் சினிமாவில் படிப்படியாக முன்னேறி வருகிறார். சமீபத்தில் வெளியான ’மாநாடு’ திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்த மகத், தற்போது ’கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நடிகர் மகத் கடந்த 2020ஆம் ஆண்டு பிராய்ச்சி மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு ஜூன் 7ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது என்பதும் அந்த குழந்தைக்கு அதியமான் ராகவேந்திரா என்ற பெயரை வைத்திருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தனது மகன் பிறந்து ஒரு வருடம் நிறைவு பெற்றதை அடுத்து முதலாவது பிறந்தநாளை மிகவும் சிறப்பாக தனது குடும்பத்தினருடன் கொண்டாடி உள்ளார். இது குறித்த க்யூட் புகைப்படங்களை மகத் சமூக தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.