சொந்த ஊரை சேர்ந்த 250 குடும்பத்திற்கு அரிசி உள்ளிட்ட பொருட்களை கொடுத்த நடிகர்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தினக்கூலி மக்கள் உள்பட பலர் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்கள் பலர் தங்களால் இயன்ற அளவுக்கு நிதியாகவும், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களாகவும் உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் நந்தா தனது சொந்த ஊரான கோவை அருகே உள்ள சென்றம்பாளையம் கிராமத்தில் உள்ள 250 குடும்பங்களுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களை கொடுத்து உதவி செய்துள்ளார். இதனையடுத்து அந்த கிராமத்தினர் நடிகர் நந்தா மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு நன்றி கூறியுள்ளனர்.

இதேபோல் இன்னும் பல நடிகர்கள் அவரவர் சொந்த ஊருக்கு மட்டுமின்றி தமிழக மக்கள் அனைவருக்கும் நிதியுதவியும் பொருளுதவியும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

அடுத்தவனை கேலி பண்ணா பத்தாது: கொஞ்சம் பொறுப்பா இருங்க: நடிகர் சாந்தனு

அடுத்தவர்களை கேலியும் கிண்டலும் செய்தால் மட்டும் பத்தாது, கொஞ்சம் பொறுப்பாகவும் இருக்க வேண்டும் என்று நடிகர் சாந்தனு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேர்களுக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

கொரோனா தடுப்பு நிதியாக ரூ.9 கோடி வழங்கிய பிரபல திரைப்பட கதாசிரியர்!

இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு துறையினர் கோடிக்கணக்கில் நிதியுதவி செய்து வருகின்றனர்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? முக்கிய தகவல்

10ஆம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 27ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் 24 ஆம் தேதியே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்

அசாம் மாநிலத்தில் பரவிவரும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்!!! கொத்துக் கொத்தாக செத்து மடியும் பன்றிகள்!!!

இந்தியாவில் ஆப்பிக்கப் பன்றிக்காய்ச்சல் நோய்த்தொற்று முன்னெப்போதும் பரவாத நிலையில் தற்போது அசாம் மாநிலத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.